இலங்கை

அமெரிக்கா வரி உயர்வு பட்டியலில் இலங்கை இல்லை!

Published

on

அமெரிக்கா வரி உயர்வு பட்டியலில் இலங்கை இல்லை!

   ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார்.

மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார்.

Advertisement

அந்த நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பட்டியல்,

தென் கொரியா – 25%வரி

ஜப்பான் – 25% வரி

Advertisement

மியான்மர் – 40% வரி

லாவோஸ் – 40% வரி

தென்னாப்பிரிக்கா – 30% வரி

Advertisement

கஜகஸ்தான் – 25% வரி

மலேசியா – 25% வரி

துனீசியா – 25% வரி

Advertisement

இந்தோனேசியா – 32% வரி

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா – 30% வரி

வங்கதேசம் – 35% வரி

Advertisement

செர்பியா – 35% வரி

கம்போடியா – 36% வரி

தாய்லாந்து – 36% வரி

Advertisement

மேலும் அமெரிக்காவுக்கு எதிரான இந்த நீடித்த வர்த்தக பற்றாக்குறைக்கு காரணமான பல ஆண்டுகால வரி மற்றும் வரி அல்லாத கொள்கைகள் மற்றும் வர்த்தக தடைகளை சரிசெய்ய இந்த வரிவிதிப்பு அவசியம் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

இந்த பற்றாக்குறை எங்கள் பொருளாதாரத்துக்கும், எங்கள் தேசிய பாதுகாப்புக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும் என்று இந்த நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version