உலகம்

அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை!

Published

on

அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை!

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை என்றும் அவர் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

எனினும், எவ்வாறான நடவடிக்கைகள் அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்பது பற்றி ட்ரம்ப் எதுவும் விரிவாக பதிவிடவில்லை.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றத்திலிருந்தே பல்வேறு நாடுகள் மீதும் வரி விதித்து வருகிறார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் 17 ஆவது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான நிலையிலேயே ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version