வணிகம்

இனி மினிமம் பேலன்ஸ் டென்ஷன் வேண்டாம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முன்னணி வங்கிகள்

Published

on

இனி மினிமம் பேலன்ஸ் டென்ஷன் வேண்டாம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முன்னணி வங்கிகள்

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட சில முக்கிய வங்கிகள், சேமிப்பு கணக்குகளில் சராசரி மாதாந்திர இருப்பு தொகையை (AMB) பராமரிக்க வேண்டும் என்ற தேவையை நீக்கியுள்ளன. இதனால், ஜூலை 2025 முதல், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க தவறினால் எந்த அபராதமும் விதிக்கப்படாது.சராசரி மாதாந்திர இருப்பு தொகை (AMB) என்றால் என்ன?சராசரி மாதாந்திர இருப்பு (AMB) என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு தொகையாகும். இந்தத் தொகை தேவையான அளவை விடக் குறைந்தால், வங்கிகள் அபராதம் விதிப்பது வழக்கம். இந்த அபராதம் சேமிப்பு கணக்கின் வகையை பொறுத்து மாறுபடும்.எந்தெந்த வங்கிகள் இந்த சலுகையை வழங்கியுள்ளன?1. பேங்க் ஆஃப் பரோடா:பேங்க் ஆஃப் பரோடா, ஜூலை 1, 2025 முதல் அனைத்து நிலையான சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காததற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளில் மாதாந்திர சராசரி இருப்பு குறைவாக இருந்தாலும் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், பிரீமியம் சேமிப்பு கணக்கு திட்டங்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது.2. இந்தியன் வங்கி:இந்தியன் வங்கி, அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புக்கான அபராத கட்டணங்களை முழுமையாக நீக்கியுள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.3. கனரா வங்கி:மே 2025-ல் கனரா வங்கி, வழக்கமான சேமிப்பு கணக்குகள், சம்பள கணக்குகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) சேமிப்பு கணக்குகள் உட்பட அனைத்து வகையான சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் சராசரி மாதாந்திர இருப்பு தேவைக்கான தள்ளுபடியை அறிவித்தது.4. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB):பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), தனது அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அபராத கட்டணங்களை வசூலிக்கப் போவதில்லை.5. எஸ்.பி.ஐ:ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு முதல் அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும் என்ற தேவையைத் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டாலும் அபராதம் கிடையாது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version