இலங்கை

உப்பால் வெடித்த குழப்பம் ; நாடாளுமன்றில் பொங்கியெழுந்த நாமல்

Published

on

உப்பால் வெடித்த குழப்பம் ; நாடாளுமன்றில் பொங்கியெழுந்த நாமல்

விவசாயம், கடற்றொழில் துறைகளை போன்றல்லாமல், இலங்கையில் சில உப்பு உற்பத்தி நிறுவனங்களே உள்ளன.

இவ்வாறான சில நிறுவனங்களைக் கையாள முடியாமல், உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

அத்துடன், நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கும் வரையில் காத்திருந்து அதன் பின்னர் அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் முன்கூட்டியே திட்டமிடல் செய்யப்பட்டிருந்தால், இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.

இந்தச் சூழலில் உப்பின் விலை அதிகரிக்கின்ற வரையில் காத்திருந்து, தற்போது உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

அதனை விடவும், நாட்டுக்கு உப்பு கொண்டு வரப்பட்டதன் பின்னரும், அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், கடந்த காலத்தில் உரிய முறையில் திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினாலேயே, பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினாலேயே, பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதனைத் தவிர்ப்பதற்கு வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version