உலகம்

எகிப்தில் முக்கிய தரவு சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து – நால்வர் மரணம்

Published

on

எகிப்தில் முக்கிய தரவு சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து – நால்வர் மரணம்

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள முக்கியமான தரவு சேமிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டது.

இதில் நால்வர் மரணமடைந்தனர், குறைந்தது 22 பேர் காயமடைந்ததாக எகிப்திய சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஹோசாம் அப்டல் காஃபார் தெரிவித்தார்.

Advertisement

எகிப்தின் தொலைத்தொடர்பு கட்டடத்தில் திங்கட்கிழமை ஏற்பட்ட அந்தத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அதனால் தலைநகரம் முழுவதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக எகிப்திய தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.

இது குறித்து அறிக்கை ஒன்றில் தெரிவித்த எகிப்திய தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அமர் டலாட், 24 மணிநேரத்துக்குள் படிப்படியாக தொடர்புச் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று விளக்கினார்.

Advertisement

மேலும் எகிப்திய தொலைபேசி சேவை வெளியிட்ட அறிக்கையில், ஊழியர் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தது. அத்துடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் உறுதியளித்தது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version