இலங்கை
எதற்காக மறைக்கப்படுகிறது இந்தியாவுடனான ஒப்பந்தம்; விமல் வீரவன்ஸ கேள்வி!
எதற்காக மறைக்கப்படுகிறது இந்தியாவுடனான ஒப்பந்தம்; விமல் வீரவன்ஸ கேள்வி!
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட, ‘பாதுகாப்பு ஒத்துழைப்பு’ ஒப்பந்தம் உட்பட பல பிரதானமான ஒப்பந்தங்கள் எதற்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன? என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- அமெரிக்காவின் தாளத்துக்கேற்ப செயற்பட்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன கூட 1988ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிட்டார். ஜே.ஆரின் மருமகனான ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அந்த உடன்படிக்கை கூட பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஆனால் தேசிய மக்கள் சக்தியினர் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்தியப் பிரதமர் இலங்கை வந்த போது ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அந்த விடயங்கள் தொடர்பில் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. எதற்காக ஒப்பந்தங்கள் மறைக்கப்படுகின்றன? இலங்கைக்குப் பாதுகாப்பற்ற ஒப்பந்தங்களே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்குத் தேவையான ஒப்பந்தமென்றால், அது வெளியிடப்பட்டிருக்கும். ஒளித்து வைக்கப்பட்டுள்ளதால் அதிலுள்ள விடயங்கள் ஆபத்தானவை – என்றார்.