இலங்கை

ஒற்றை நாயால் உயிர் பிழைத்த கிராமம் ; நெகிழ்ச்சியில் கொண்டாடும் ஊரவர்கள்

Published

on

ஒற்றை நாயால் உயிர் பிழைத்த கிராமம் ; நெகிழ்ச்சியில் கொண்டாடும் ஊரவர்கள்

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 6ஆம் திகதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.

இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

Advertisement

ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு கண் விழித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் அந்த நள்ளிரவில் அக்கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார்.

Advertisement

இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version