இலங்கை

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கினர்

Published

on

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கினர்

  கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிய முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version