பொழுதுபோக்கு
கிரிக்கெட்டே தெரியாத ஒரு பையன்; அவன் டம்மிதான்: சென்னை 28 பிரேம்ஜி ரகசியம் சொன்ன வெங்கட் பிரபு!
கிரிக்கெட்டே தெரியாத ஒரு பையன்; அவன் டம்மிதான்: சென்னை 28 பிரேம்ஜி ரகசியம் சொன்ன வெங்கட் பிரபு!
ஸ்போர்ட்ஸ் டிராமா வகையான திரைப்படங்களுக்கு எப்போதுமே மவுசு குறைவதில்லை. எளிதாக யூகிக்கக் கூடிய திரைப்படங்களாக இருந்தாலும், விறுவிறுப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைக்களம் இருப்பதால், இது போன்ற படங்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.தமிழில் வெளியான ஸ்போர்ட்ஸ் டிராமா சினிமாக்களில் ‘சென்னை 28’ திரைப்படத்திற்கு தனி இடம் இருக்கிறது. ஏனெனில், மற்ற படங்களை விட இப்படத்தில் இருந்த கதாபாத்திரங்கள் சாமானிய மக்கள், விளிம்பு நிலை மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வின் ஜாலியான பக்கங்களை திரையில் காண்பித்தது.குறிப்பாக, நட்சத்திர அந்தஸ்து கொண்ட பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல், கதையின் மீது மட்டும் நம்பிக்கை கொண்டு ஒரு திரைப்படத்தை எடுத்தால் மக்களிடம் இருந்து நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்தை பல இயக்குநர்களுக்கு மீண்டும் உணர்த்திய பெருமை ‘சென்னை 28’ படத்திற்கு இருக்கிறது.இப்படத்தில், நடித்திருந்த அனைவரது பாத்திரங்களையும் நிச்சயம் நம்மிடமோ அல்லது நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களிடமோ பொருத்தி பார்க்கலாம். அந்த வகையில் பிரேம்ஜியின் பாத்திரம் கூடுதல் ஸ்பெஷல் என்று கூறலாம். இதனை உருவாக்கிய விதம் குறித்து படத்தின் இயக்குநரும், பிரேம்ஜியின் சகோதரருமான வெங்கட் பிரபு நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.அந்த வகையில், கிரிக்கெட் விளையாட தெரியாத நண்பரை எப்போதுமே விளையாடும் போது நாம் அழைத்துச் செல்வோம். அப்படி ஒரு கேரக்டராகவே பிரேம்ஜியின் பாத்திரத்தை வடிவமைத்ததாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டும் என்பதை தவிர வேறு எந்த ஆசையும் சிலருக்கு இருக்காது. அப்படியான பாத்திரமாக ‘சென்னை 28’ படத்தில் பிரேம்ஜியின் கேரக்டரை, தாம் உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அப்படி பார்த்தால், நிச்சயம் பிரேம்ஜியின் கதாபாத்திரத்தை போன்று நமது நண்பர்கள் வட்டத்தில் சிலரை நாம் கண்டிருப்போம். இப்படி, எளிமையான விஷயங்களை இயல்பாக காட்சிப்படுத்தியதும் அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.