இலங்கை

குற்றப் பிரதேசமாகவே செம்மணியைக் கருதுக; சட்டத்தரணி ரட்ணவேல் கருத்து!

Published

on

குற்றப் பிரதேசமாகவே செம்மணியைக் கருதுக; சட்டத்தரணி ரட்ணவேல் கருத்து!

செம்மணிப் புதைகுழியில் அவதானிக்கப்பட்ட – மீட்கப்பட்ட சிதிலங்கள் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே புதைக்
கப்பட்டுள்ளன. புதைகுழிக்குள் பல அசாதாரண சூழ்நிலைகள் காணப்படுகின்றன. எனவே, முகத்தோற்றத்தின் அளவில் குற்றப்பிரதேசமாகவே இதைக் கருதவேண்டும். இவ்வாறு சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- செம்மணிப் புதைகுழியில் நேற்றையதினம் 12ஆம் நாள் அகழ்வுப்பணி இடம்பெற்றிருந்தது. மேலும் புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்திலிருந்து 2 அடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கிறன. இது சாதாரணமாக ‘மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட’ இடமாகத் தெரியவில்லை. மாறாக சடுதியாக புதைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் காணப்படுகின்றன. இது மிகப்பெரும் சர்சையை தோற்றுவித்திருக்கிறது. எனவே முகத்தோற்றத்தின் அளவில், நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது. இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தினமும் அவதானிக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version