இலங்கை
கோர விபத்து; ரயிலுடன் மோதிய பாடசாலை பேருந்து
கோர விபத்து; ரயிலுடன் மோதிய பாடசாலை பேருந்து
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே இன்று காலை (8) ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் மூத்த மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன், ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.
ரயில் மோதியதில் 50 மீற்றர் இழுத்து செல்லப்பட்டதில் பள்ளி வேன் சுக்குநூறாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.