இலங்கை
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெற்ற வணிக சந்தை!
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெற்ற வணிக சந்தை!
வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் அதிபர் திருமதி சுலபாமதி கணேசமூர்த்தி தலைமையில், வணிக மன்றத்தினரால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது.
கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் வ.சிறீகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர்.