இந்தியா

சூதாட்டத்திற்காக வங்கியில் பண மோசடி செய்த மேலாளர் கைது

Published

on

சூதாட்டத்திற்காக வங்கியில் பண மோசடி செய்த மேலாளர் கைது

கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் சூதாட்டத்திற்காக ரூ.31 கோடி பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளார். 

இந்திய மாநிலமான பீகாரில் உள்ள கோட்​டக் மஹிந்​திரா வங்​கி​யின் ஒரு கிளை மேலா​ளர் சூதாட்​டம் மற்​றும் பந்தய செயலிக்கு அடிமையாகி உள்ளார். 

Advertisement

இவர், கடந்த 2 ஆண்டுகளாக பீகார் அரசின் பொது பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் திருடியுள்ளார்.

அந்த பணத்தை வைத்து பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார். 

குறிப்பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தல் அதி​காரிக்​கான காசோலைகளில் கையெழுத்து போட்டும் காசோலை குளோனிங் மூலமாகவும் ரூ.31.93 கோடியை மோசடி செய்​துள்​ளார்.

Advertisement

இதில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக வாடிக்கையாளர்களின் ஆதார் மற்​றும் கேஒய்சி விவரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதை வைத்து 21 போலி வங்​கிக் கணக்​கு​களை திறந்​துள்​ளார். 

இதன் மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் உள்ள பந்தய செயலிக்கு பணம் அனுப்பியுள்ளார். 

இதையடுத்து, வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டில் சந்தேகம்படும்படியான ஆர்​டிஜிஎஸ் பரிமாறத்தைக் கண்டுபிடித்த போது தான் இந்த மோசடி வெளிவந்துள்ளது. பின்னர், கோடக் மஹிந்திரா வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version