இலங்கை

தமிழர் பகுதியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ; குடைசாய்ந்த லொறி

Published

on

தமிழர் பகுதியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ; குடைசாய்ந்த லொறி

திருகோணமலை கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, டிப்பருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த டிப்பர் சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும்,

நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version