இலங்கை

தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கொண்டாட்டம்; காசா மக்களுக்காக கண்ணீர்; விமலின் புது அவதாரம்!

Published

on

தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது கொண்டாட்டம்; காசா மக்களுக்காக கண்ணீர்; விமலின் புது அவதாரம்!

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச இசைபாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கும், சமீபத்தில் யாங்கி-சியோன் கூட்டணியால் தாக்கப்பட்ட ஈரானுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்  இந்த பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.

Advertisement

‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ ( Kageda Me Munissam) என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் மூலம், விமல் வீரவன்ச , மீண்டும் ஒரு முறை அரசியல் மேடையில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

உள்நாட்டு  போரில் ஈவிரக்கமின்றி அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோது , ராஜபக்சர்களுடன் கைகொட்டி சிரித்த விமல் வீரவன்ச இன்று காசா மக்களுக்காக கண்ணீர்விடுவது விந்தையாகவுள்ளது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version