இலங்கை

தாயுடன் தகாத தொடர்பு ..மகள் கர்ப்பம்; பூசாரி வேடதாரிக்கு 15 வருட கடூழிய சிறை

Published

on

தாயுடன் தகாத தொடர்பு ..மகள் கர்ப்பம்; பூசாரி வேடதாரிக்கு 15 வருட கடூழிய சிறை

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி பூசாரியை குற்றவாளியாக இனங்கண்ட ​பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார, அந்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (08) விதித்தார்.

ஹொரணை, ஹிம்புட்டுஹேனவைச் சேர்ந்த கல்லுகே சுரங்க புஷ்பகுமார என்ற 44 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 500,000 இழப்பீடு வழங்கவும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு லேசான வேலைகளுடன் 24 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஹொரணை, ஹிம்புட்டுஹேன பகுதிக்கு பூசாரி போல 2021 ஆம் ஆண்டு சென்றிருந்த குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அந்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் சிறுமியையும் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தி, கர்ப்பிணியாகியுள்ளார்.

Advertisement

சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட போலி பூசாரிக்கு எதிராக ​ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அடிப்படை விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், சட்டமா அதிபரினால், களுத்துறை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version