சினிமா
திருமணமே வேண்டாம், பல முறை யோசித்தேன்.. நாயகி விசித்ரா எமோஷ்னல் பேட்டி
திருமணமே வேண்டாம், பல முறை யோசித்தேன்.. நாயகி விசித்ரா எமோஷ்னல் பேட்டி
போர்க்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை விசித்ரா. நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.மேலும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் என சின்னத்திரையில் வலம் வரும் நடிகை விசித்ரா தற்போது அவரை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” 90களில் நான் நடித்துக் கொண்டு இருந்தபோது எனக்கு திருமணம் ஆகுமா, நல்ல கணவர் அமைவாரா என்று எல்லாம் யோசித்து இருக்கிறேன். திருமணமே வேண்டாம், சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.என் கணவர் என்னிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் கேட்ட பின்பும் பலமுறை இது குறித்து யோசித்தேன்.திருமணத்திற்கு பின் வாழ்க்கை மிகவும் சவாலானதாக மாறியது. நான் இத்தனை வருடங்கள் கடந்து வந்த என் திருமண வாழ்க்கை குறித்து யோசிக்கும் போது மிகவும் எமோஷ்னலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.