இலங்கை
துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உட்பட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் நேற்று விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டது. சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசுத் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கொழும்பு பம்பலப்பிட்டிப் பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க. சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 25ஆம் திகதி சிறைச்சாலை மருத்துவனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மே மாதம் 28ஆம் திகதி மீண்டும் மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.