இலங்கை

தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சு

Published

on

தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சு

  பதுளை , மீகஹகிவுல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

தாக்குதலின் போது தேவாலயத்தில் இருந்த போதகர், போதகரின் மனைவி, சிறுவன் மற்றும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாலய உரிமையாளருக்கும் அயல் வீட்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் இதற்கு முன்னரும் பல தடவைகள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version