இலங்கை
நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; இரவோடிரவாக தீவிரமாகும் தேடுதல்
நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; இரவோடிரவாக தீவிரமாகும் தேடுதல்
ஹட்டன் சிங்கமலை பகுதியில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் சிங்கமலை அணைக்கட்டில் தவறி வீழ்ந்து காணாமல் போனமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பாடசாலை மாணவன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழுவொன்று நேற்றைய தினம் ஹட்டன் சிங்கமலை அணைக்கட்டு பகுதியை பார்வையிட சென்றுள்ளனர். இதன் போதே குறித்த மாணவன் தவறி விழுந்து காணமல் போயுள்ளார்.
மாணவனை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெறுவதாகவும் இரவு நேரம் என்பதால்
தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.