இலங்கை

புதிய புதைகுழியில் குவியலாகச் சிதிலங்கள்; அடையாளப்படுத்துவதில் சிக்கல்!

Published

on

புதிய புதைகுழியில் குவியலாகச் சிதிலங்கள்; அடையாளப்படுத்துவதில் சிக்கல்!

செம்மணி மனிதப்புதைகுழியில், துறைசார் பேராசிரியர் ராஜ்சோமதேவா தனது நிபுணத்துவத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்திய இடத்தில் குவியலாகச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன .

இந்தப்புதைகுழியில் இரு தினங்களுக்கு முன்னர், ஒரு மனிதச் சிதிலம் அடையாளம் காணப்பட்டிருந்தது. நேற்று மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அகழ்வுப் பணிகளின்போதே அங்கு பிறிதொரு சிதிலமும், வேறு சில சிதிலங்கள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன . அவற்றின் மீதான மேலதிக பணிகள் இன்று தொடரவுள்ளன.

Advertisement

நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், சட்டத்தரணி ஞா.ரணித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version