இலங்கை

யாழ். நல்லூர் பிரதேச விடுதிகள் தொடர்பாக விசேட அறிவிப்பு

Published

on

யாழ். நல்லூர் பிரதேச விடுதிகள் தொடர்பாக விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளானது எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும்.

பெற்றுக்கொண்ட விண்ணப்பப்படிவங்களினை பூரணப்படுத்தி எதிர்வரும் 30.07.2025 புதன் கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும்.

நல்லூர் பிரதேச சபையின் இவ் பகிரங்க அறிவித்தலினை உதாசீனம் செய்து தங்களுடைய விடுதிகளை நல்லூர் பிரதேச சபையில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும்.

Advertisement

அருகில் காணப்படும் விரைவு எதிர்வினை முகவரியினை (OR Code) வருடல் (Scan) செய்வதன் மூலமும் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கிக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version