பொழுதுபோக்கு
40 வருட மர்மம்; ஜெமினி கணேசன் மகளுடன் ஹோட்டல் அறையில் கமல்ஹாசன்; வாக்குவாதம் செய்த வாணி கணபதி!
40 வருட மர்மம்; ஜெமினி கணேசன் மகளுடன் ஹோட்டல் அறையில் கமல்ஹாசன்; வாக்குவாதம் செய்த வாணி கணபதி!
திரை உலக நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது. குறிப்பாக, பல வருடங்களுக்குப் பிறகு வெளிவரும் சில சம்பவங்கள் பெரும் பேசுபொருளாக மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான், 1970களின் இறுதியில் தமிழ் சினிமா உலகை உலுக்கியதாகக் கூறப்படும் கமல் ஹாசன், ரேகா, மற்றும் அவரது அப்போதைய மனைவி வாணி கணபதி தொடர்பான ஒரு சம்பவம்.1979-ல் சென்னை ஹோட்டல் சோழா ஷெரட்டனில் நடிகர் கமல்ஹாசனின் அப்போதைய மனைவி வாணி கணபதி, எதிர்பாராத விதமாக ஹோட்டலுக்கு வந்து, அங்கு ரேகாவுடன் இருந்த கமல்ஹாசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு ஹோட்டல் ஊழியர் தெரிவித்துள்ளார். இதுதான் சமீபத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள ஒரு செய்தி, இந்தச் சம்பவம் அப்போதைய பத்திரிகை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வரவில்லை.ரெடிஃப் இணையதளத்திற்கு ஒரு பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை கூறும்போது, “1979-ன் பிற்பகுதியில், நான் சென்னை ஹோட்டல் சோழா ஷெரட்டனில் பணிபுரிந்தேன். ஒரு இரவு நான் வேலைக்கு வந்தபோது, அந்த இடம் முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது. வரவேற்பறையில் இருந்த பெண்கள், கமல் ஹாசனும் ரேகா கணேசனும் ஹோட்டலில் ரேகாவின் அறையில் இருந்தபோது, கமலின் மனைவி வாணி கணபதி வந்து தன் கணவரை பகிரங்கமாகத் திட்டினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.இந்தச் சம்பவம் நடந்த சமயத்தில், ரேகா யாஷ் சோப்ரா இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் நடித்த ‘சில்சிலா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே வேளையில், 1981-ல் வெளிவரவிருந்த கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடித்த ‘மீண்டும் கோகிலா’ படத்திலும் ரேகா ஒப்பந்தமாகியிருந்தார். இந்தப் படப்பிடிப்பின்போதுதான் கமலுக்கும் ரேகாவுக்கும் இடையே ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த உறவு அப்போதைய காலகட்டத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.இந்த ஹோட்டல் மோதலுக்குப் பிறகு, ‘மீண்டும் கோகிலா’ படத்திலிருந்து ரேகா நீக்கப்பட்டு, மலையாள நடிகை தீபா (உன்னி மேரி என்றும் அழைக்கப்படுபவர்) அவருக்குப் பதிலாக நடித்தார் என்று வதந்திகள் பரவின. கமல் மற்றும் ரேகா இருவரும் இந்தச் சம்பவத்தை ஒருபோதும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. இதனால் இது ஒரு மர்மமாகவே இன்றும் நீடிக்கிறது.1978-ல் வாணி கணபதியை திருமணம் செய்திருந்த கமல் ஹாசனின் வாழ்வில், இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு சரிக்காவுடனான அவரது நெருக்கம் அதிகரித்தது. சரிகா கர்ப்பமானதாகவும் செய்திகள் வெளிவந்தன. 1988-ல் கமல் மற்றும் வாணி இருவரும் விவாகரத்து பெற்றனர். அதே ஆண்டு கமல், சரிக்காவை மணந்தார். இவர்களின் இந்த உறவு, கோலிவுட் உலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.இந்தச் சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, அமிதாப் பச்சன் மற்றும் ரேகா இடையேயான கிசுகிசுக்கப்படும் காதல் கதை பாலிவுட்டின் மிகவும் பேசப்படும் மர்மங்களில் ஒன்றாகும். அமிதாப், 1973-ல் ஜெயா பாச்சுரியை திருமணம் செய்த பின்னரும், ரேகாவுடனான அவரது நெருக்கம் குறித்த வதந்திகள் தீவிரமடைந்தன. குறிப்பாக ‘சில்சிலா’ போன்ற படங்களில் அவர்களின் அற்புதமான கெமிஸ்ட்ரி, அவர்களின் நிஜ வாழ்க்கை முக்கோணக் காதலையே பிரதிபலிப்பதாகப் பலரும் நம்பினர்.2015-ல் ரெடிஃப் உடனான ஒரு நேர்காணலில், நடிகர் ரஞ்சித் தனது முதல் இயக்கப் படமான ‘காரணமா’வில் ஒரு பெரிய நடிகர்கள் தேர்வு மாற்றம் ஏற்பட்டது எப்படி என்று நினைவு கூர்ந்தார். ரஞ்சித் அப்போது, “‘காரணமா’ படத்தின் முதல் ஷெட்யூல் முழுவதும் மாலை நேரம். ஒரு நாள், ரேகா என்னை அழைத்து, மாலை நேரங்களை அமிதாப் பச்சனுடன் செலவிட விரும்புவதால், படப்பிடிப்பு நேரத்தை காலை நேரத்திற்கு மாற்ற முடியுமா என்று கேட்டார்” என்று தெரிவித்திருந்தார்.அமிதாப் பச்சன் ஜெயா பச்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரேகா 1990 இல் தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை சுருக்கமாக மணந்தார். அந்த திருமணம் அடுத்த ஆண்டு அவரது மரணத்துடன் சோகமாக முடிந்தது. நடிகை ரேகா பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.