இலங்கை

அஜித்குமார் மரணம் ; நிகிதாவின் லீலைகள் அம்பலம்

Published

on

அஜித்குமார் மரணம் ; நிகிதாவின் லீலைகள் அம்பலம்

தமிழகத்தில் பொலிஸாரால் அடித்துகொலை செய்யப்பட்ட அஜித்குமார் என்கின்ற இளைஞனை களவெடுத்ததாக பொய் கூறி பொலிஸரிடம் மாட்டிவிட்ட நிகிதா எனும் பெண் தொடபில் பல மோசடி குற்றசாட்டுக்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக நிகிதா மீது சென்னையிலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோயிலின் தற்காலிக காவலாளியாக இருந்த அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், அஜித்குமார் மீது முறைப்பாடு அளித்த நிகிதா மீது மறுபுறம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.

அவர் மீது பல பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல திருமண மோசடிகள் அவர் மீது இருப்பதும் தெரியவந்துள்ளது.

 2011ஆம் ஆண்டில் பெரிய பெரிய அரசியல் தலைவர்களை தனக்கு தெரியும் என்றும், அவர்கள் மூலமாக எளிதாக அரசு வேலை வாங்கி கொடுப்பதாகவும் நிகிதாவும், அவரது தாயாரும் பலரிடம் பணமோசடி செய்த  சம்பவம் அபலமாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய இளைஞ்னின் மரணத்திற்கு காரணமாக நிகிதா தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்கள் வெளியிடப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version