சினிமா
அமீர் கான் இல்லைன்னா எங்களுக்கு குழந்தை பிறந்திருக்காது!! நடிகர் விஷ்ணு விஷால்..
அமீர் கான் இல்லைன்னா எங்களுக்கு குழந்தை பிறந்திருக்காது!! நடிகர் விஷ்ணு விஷால்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2021ல் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.விஷ்ணு விஷால் – ஜுவாலாவின் பெண் குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர் கான் சென்னைக்கு வந்து பெயர் வைத்திருக்கிறார். இதுகுறித்து விஷ்ணு விஷால் எமோஷ்னலாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.அதில், நானும் ஜுவாலாவும் குழந்தைக்காக சிகிச்சை முயற்சி செய்து மனமுடைந்து இருந்தோம். அதை அறிந்த அமீர் கான் உடனே மும்பைக்கு எங்களை வரவழைத்து மருத்துவரிடம் அழைத்து சென்றதுடன் 10 மாதங்கள் ஜுவாலாவை அவர் வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொண்டார்.அவர் ஒல்லை என்றால் எங்களுக்கு மகள் பிறந்திருக்க மாட்டார். அதனாலாயே குழந்தைக்கு அவரை பெயர் வைக்க சொன்னோம் என்று எமோஷ்னலாக பகிர்ந்துள்ளார்.