பொழுதுபோக்கு

அய்யயோ.. நா பண்ணல என்ன விட்டுங்கண்ணா; கதையை கேட்டு தெரித்து ஓடிய ஜீவா: எந்த படம் தெரியுமா?

Published

on

அய்யயோ.. நா பண்ணல என்ன விட்டுங்கண்ணா; கதையை கேட்டு தெரித்து ஓடிய ஜீவா: எந்த படம் தெரியுமா?

தயாரிப்பாளரின் மகன் என்ற அயைாளத்துடன் தமிழ் சினிமாவில், அறிமுகமாகி இருந்தாலும், தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர் ஜீவா, ஒரு படத்தின் கதையை கேட்டு நான் நடிக்கவில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லி ஓடியுள்ளார்.விக்ரமன் இயக்கிய பெரும்புள்ளி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜீவா. அதன்பிறகு, 2003-ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தித்திக்குதே, படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.அதன்பிறகு, 2005-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ராம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ஜீவா நடிப்புக்கு பெரிய பாராட்டுக்களையும் பெற்று தந்தது. அதன்பிறகு ஈ, டிஷ்யூம், ஆகிய படங்களில் நடித்த ஜீவா, மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். 2007-ம் ஆண்டு கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ராம் இயக்கிய இந்த படத்தின் மூலம் ஜீவா ஒரு கைதேர்ந்த நடிகர் என்ற பாராட்டுக்களை பெற்றிருந்தார்.அஞ்சலி நாயகியாக அறிமுகமான இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியிருந்தார். இந்த படத்தின் கதையை, இயக்குனர் ராம் ஜீவாவிடம் சொன்னபோது, என்ன ரியாக்ஷன் கொடுத்தேன் என்பது குறித்து ஜீவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். முதன்முறையாக ராம் சாரிடம் கதை கேட்கும்போது, “அண்ணா, இந்தக் கதையை நான் பண்ணலனா என்னை விட்டுங்கண்ணா” என்று நான் கூறினேன். அவரோ, “ஏன்? ஏன்?” என்று கேட்டார். பயங்கரமா இருக்குகு, ஆக்டிங்க எல்லாம் பயஙங்கரமா பண்ணணும் என்று சொன்னேன்.அதன் பிறகு, ஒரு தயாரிப்பாளரை அழைத்து வந்தார். “கண்ணா, பிண்ணா என்று சம்பளம் சொல்கிறோம்” அதற்கும் சம்மதித்தார்கள். “சரி” என்றோம். “அய்யோ, நாம மாட்டிக்கிட்டோம்டா, இதை செய்துதான்டா ஆகணும்” என்று நினைத்துக்கொண்டேன். அதன்பிறகு, மனதை மிகவும் உறுதியாக வைத்துக் கொண்டு செய்த படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே, “ரொம்ப கஷ்டப்படப் போகிறேன்” என்று எனக்குத் தெரியும். ஆனால் தினமும் அந்தத் தாடியை ஒட்டுவது, இது செய்வது, அது செய்வது என என்னென்னவோ வேலைகள். ஊருக்குப் போகிறோம். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஊருக்குப் போகிறோம், சாவர் குண்ட் போகிறோம். 6 நாட்கள் சைக்கிளிலேயே ஓட்டுகிறேன்.அஞ்சலிக்கு இதுதான் முதல் படம். இந்த படத்தில், நீங்கள் மூன்று காலகட்டங்களில் வருகிறீர்கள். தாடி இல்லாமல் வருகிறீர்கள், தாடி கொஞ்சமாக இருக்கும்போது, தாடி இல்லாதவராக வருகிறீர்கள்” என்று சொல்லி, ஒரே லொகேஷனில் மூன்று மேக்கப்களை மாற்றி, மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. தேசிய விருது கிடைக்கும். தேசிய விருது” என்று சொல்லிதான் தூண்டிவிட்டார்கள். எந்த விருதும் கிடைக்கவில்லை. ஏன்ன அப்ளை பண்ணல என்று ஜீவா கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version