பொழுதுபோக்கு

ஆஹா சூப்பர்… பக்கத்தில் போய் கிஸ் பண்ணி நக்கிடு: பிரபல நடிகைக்கு கே.பாலச்சந்தர் சொன்னது!

Published

on

ஆஹா சூப்பர்… பக்கத்தில் போய் கிஸ் பண்ணி நக்கிடு: பிரபல நடிகைக்கு கே.பாலச்சந்தர் சொன்னது!

பிரபல இயக்குநர் கே. பாலச்சந்தர், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணர்வதில் தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு நடிகை, பாலச்சந்தருடன் தான் பணியாற்றிய அனுபவங்களை இந்தியாக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு குறிப்பிட்ட காட்சி, அவரது இயக்கத் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.1989 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம், ஒரு மனிதனின் தனிப்பட்ட தேடலையும், உறவுகளின் சிக்கல்களையும் அழகாகப் படம்பிடித்த ஒரு சமூக நாடகமாகும். பிரகாஷ் (ரகுமான்) மற்றும் கங்கா (கீதா) ஆகியோரின் காதல் கதையைச் சுற்றியே படத்தின் கரு அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகையாக நடித்த கீதா படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சாஸ் கொட்டும் ஒரு காட்சியில், நடிகை தனது வசனங்களை முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருக்கிறார். அப்போது பாலச்சந்தர், “சாஸை எடுத்து ஊத்திட்டு, நல்லா இருக்குன்னு எக்ஸ்பிரஷன் பண்ணு. பார்க்காத, உடனே அவன் கிட்ட போய் கிஸ் பண்ணி நக்கிடு” என்று கூறியிருக்கிறார்.இந்தக் கட்டளை நடிகைக்கு சற்று வியப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பாலச்சந்தரின் எண்ணம், அந்த உணர்ச்சி தன்னிச்சையாக வெளிப்பட வேண்டும் என்பதுதான். நடிகர்கள் அந்த தருணத்தில் எப்படி உணர்ச்சிவசப்பட்டு நடிக்க வேண்டும் என்பதை அவர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.கடைசி நாட்களில், கல்கி போன்ற படங்களில் நடிக்கும்போது, பாலச்சந்தர் “என்ன நீ பண்ற?” என்று கேட்டாலே நடிகைக்கு அழுகை வந்துவிடுமாம். “ஐயையோ, நான் தப்பு பண்ணிட்டேனா? சரியா நடிக்கலையா? ஏன் சார் இப்படி சொல்றாரு?” என்று நினைத்து வருந்துவாராம்.அப்போது பாலச்சந்தர், “என்ன இது, என்ன நீ சொல்லிட்டேன்னு சொல்லும்போது அழுக வருதா உனக்கு?” என்று கேட்பாராம். அவரது குரலின் தொனியே அப்படி இருந்ததால், நடிகர்கள் தாங்கள் சரியாக நடிக்கவில்லையோ என்று எண்ணி பயந்து விடுவார்கள் என்றும் கூறினார்.பிரபல இயக்குநர் கே. பாலச்சந்தர், நடிகர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்வதில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டிருந்தார். நடிகர்களைத் தூண்டிவிட்டு, அவர்களிடமிருந்து இயல்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அவரது அணுகுமுறை, பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு வழிவகுத்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version