சினிமா
இது என் வாழ்க்கையின் turning point; தெலுங்கு பிரவேசம் குறித்து மனம்திறந்து கதைத்த மாளவிகா!
இது என் வாழ்க்கையின் turning point; தெலுங்கு பிரவேசம் குறித்து மனம்திறந்து கதைத்த மாளவிகா!
தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சயமான நடிகை மாளவிகா மனோஜ், தற்போது தெலுங்கு திரையுலகில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளதனை உறுதி செய்துள்ளார். சுஹாஸ் கதாநாயகனாக நடித்துள்ள “ஓ பாமா அய்யோ ராமா” என்ற திரைப்படத்தில், மாளவிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்பதுடன், இது தெலுங்கு ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மாளவிகா மனோஜ், இதுவரை தமிழில் சில படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருந்தாலும், தெலுங்கில் இவ்வாறு ஹீரோயினாக அறிமுகமாவதென்பது மிகப்பெரிய சாதனை என்றே பார்க்கப்படுகின்றது.படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில், தனது மனதின் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தியிருந்தார் மாளவிகா. “பெரும்பாலான படங்களில் பெண்களுக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்காது. ஆனால் ‘ஓ பாமா அய்யோ ராமா’ படத்தில் எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருந்தது. இது ஒரு பெண் கேரக்டரின் உணர்வுகளையும், அவளின் வாழ்க்கையை சுற்றியும் நகரும் கதை. எனவே, இது எனக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு. முதலாவது தெலுங்கு படத்திலேயே இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஒரு அதிர்ஷ்டம் தான்!” என்று அவர் உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.