இலங்கை

இம்ரான் எம்பிக்கு உயிர் அச்சுறுத்தல்; சி.ஐ.டி இல் முறைப்பாடு

Published

on

இம்ரான் எம்பிக்கு உயிர் அச்சுறுத்தல்; சி.ஐ.டி இல் முறைப்பாடு

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்காத காரணத்தால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Advertisement

குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும், ஏனைய வழிகளிலும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததோடு, தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைபாட்டை பதிவு செய்துள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version