இலங்கை
உணவில் வெங்காயம் ; ஹோட்டலை அடித்து நொறுக்கிய நபர்கள்
உணவில் வெங்காயம் ; ஹோட்டலை அடித்து நொறுக்கிய நபர்கள்
டெல்லி – ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில், கான்வர் யாத்ரீகர்கள் குழுவுக்கு திங்கள்கிழமை (ஜூலை 7) இரவு உணவில் வெங்காயம் பரிமாறப்பட்டதால் ஹோட்டல் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி – ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில், கான்வர் யாத்ரீகர்கள் அடங்கிய 20 பேர் கொண்டகுழு வந்துள்ளது.
உணவில் வெங்காயம் சேர்த்து பரிமாறப்பட்டதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்த பின்னர், அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
புர்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்து ஹொட்டலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், இது குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.