இலங்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி; ஜனாதிபதி அநுர உறுதி!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி; ஜனாதிபதி அநுர உறுதி!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டஅனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கால ஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துக்குள் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒரு சவால். எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.