இலங்கை

ஓமந்தை அரசகாணியில் விகாரை அமைக்கும் முயற்சி மக்களால் தடுத்து நிறுத்தம்; பொலிஸார் தொடர்ந்தும் அடாவடி!

Published

on

ஓமந்தை அரசகாணியில் விகாரை அமைக்கும் முயற்சி மக்களால் தடுத்து நிறுத்தம்; பொலிஸார் தொடர்ந்தும் அடாவடி!

ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள், ஓமந்தை பொலிஸார் அத்துமீறிச் சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி பொதுமக்களால் நேற்றுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஏ9 வீதியில் ஓமந்தை பொலிஸ்நிலையத்துக்கு அருகாமையில் தனியார் உரிமை கோரிவரும் அரசகாணி ஒன்றினை பொலிஸார் துப்புரவு அதனைச்சுற்றி வேலி அமைக்க முற்பட்டுள்ளனர். விகாரையொன்று அமைப்பதற்காகவே, இவ்வாறு வேலி அமைக்க முயற்சித்ததாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து, அங்கு கூடிய அரசியல்வாதிகள், பொதுமக்களால் பொலிஸாரின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement

குறித்த காணிக்குள் எவ்வித கட்டுமானங்களோ அல்லது அபிவிருத்திப் பணிகளோ முன்னெடுக்கப்படக்கூடாது என்று ஓமந்தை பொலிஸாருக்கு பிரதேச செயலாளரால் எழுத்து மூலமான கடிதம் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version