இலங்கை
கொழும்பு பொரளை துப்பாக்கிச் சூட்டின் சி.சி.டி.வி காட்சிகள்
கொழும்பு பொரளை துப்பாக்கிச் சூட்டின் சி.சி.டி.வி காட்சிகள்
பொரளை – செர்பென்டைன் வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர்கள் தப்பிச் செல்லும் காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன், கைத்துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான தகராறின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.