சினிமா
சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!.. இது நல்ல இருக்கே
சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!.. இது நல்ல இருக்கே
தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. அவரது கணவர் சஞ்சீவ் தமிழ் சின்னத்திரையில் அதாவது சன் டிவி கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானார்.சீரியல்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்த ஆல்யா மானசா நடிப்பில் கடைசியாக இனியா என்ற தொடர் ஒளிபரப்பாகி இருந்தது.சன் டிவி இனியா சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து அவர் ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார்.இந்நிலையில், இவர்களின் நெருங்கிய தோழியான மணிமேகலை, தனது கணவருடன் ஆல்யா மானசாவின் வீட்டிற்குச் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத ஆல்யா, அன்றைய பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக பிடித்த நபர்களுடன் கழித்ததாகக் கூறி இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.