பொழுதுபோக்கு
சூப்பரா பண்றாங்க, எனக்கே டஃப் கொடுப்பாங்களோ? ஷுட்டிங் ஸ்பாட்டில் மோதிய வடிவேலு – நளினி!
சூப்பரா பண்றாங்க, எனக்கே டஃப் கொடுப்பாங்களோ? ஷுட்டிங் ஸ்பாட்டில் மோதிய வடிவேலு – நளினி!
தமிழ் சினிமாவில், விஜயகாந்த், அர்ஜூன், ராமராஜன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை நளினி தற்போது காமெடி நடிகர்களுடன் இணைந்து காமெடி நாயகியாக மாறியுள்ள நிலையில், வடிவேலுவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நளினி. அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த், அர்ஜூன், மோகன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நளினி, 1988-ம் ஆண்டு கழுகுமலை கள்வன் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார்.10 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நளினி இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், மீண்டும் 2002-ம் ஆண்டு என்ட்ரி கொடுத்த நளினி, காதல் அழிவதில்லை படத்தில் சார்மியின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நெகடீவ் ரோலில் நடித்து வந்த நளினி பிறகு காமெடிக்கு மாறினார். அந்த வகையில் 2005-ம் ஆண்டு வெளியான லண்டன் என்ற படத்தில் வடிவேலுவின் மனைவி கேரக்டரில் காமெடியில் நளினி கலக்கியிருப்பார்.இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள நளினி, இந்த அம்மா என்ன சூப்பரா பண்றாங்க, தூக்கி சாப்ட்ருவாங்க போலற்கே என்று வடிவேலு இயக்குனர் சுந்தர்.சியிடம் கூறியுள்ளார். இவங்களை விட நான் வேற மாதிரி பண்ணும், என்று சொல்லி ஹோம்வொர்க் செய்வார். அவர் எங்கு இருந்தாலும் பார்க்கலாம். நம்ம சிரிக்கிறதை விட, நம்ம முதலில் ரசிக்க வேண்டும். முதலில் நம்ம ரசித்தால் தான் அந்த கேரக்டர் ஸ்டாண்ட்அப் ஆகும்.யார்கிட்டையே பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு நல்ல மெசேஜ், அன்னைக்கு எனக்கு பொறி தட்டுச்சு, உண்மையில், நளினி மத்தது எல்லாம் தூக்கிப்போடு நீயா நானா பார்ப்போம் வடிவேலு சார் அங்கு இருக்கிறார் என்றால், அவரை விட இந்த அம்மா சூப்பரா பண்றாங்கடா என்று சொல்லுகிற மாதிரி இருக்கனும். அது வடிவேலு சார் கொடுத்த மெசேஜ் தான். வடிவேலு என்னை தூக்கிப்போட்டு அந்த கேரக்டர் பேசனும் என்று அவர் நடித்தார். அவரை போல் நினைக்காமல், நான் பெரிய ஹீரோயினாக இருந்தேன் எனறு நினைத்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து நடித்தேன் என்று கூறியுள்ளார்.