இலங்கை
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக இரண்டாவது புதைகுழி பிரகடனம்!
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக இரண்டாவது புதைகுழி பிரகடனம்!
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.