இலங்கை

ஜொன்ஸ்டனின் ஹோட்டலைத் தாக்கியவர்களுக்கு தண்டனை

Published

on

ஜொன்ஸ்டனின் ஹோட்டலைத் தாக்கியவர்களுக்கு தண்டனை

   முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனின் ஹோட்டலைத் தாக்கியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் பொல்லுகளுடன் நுழைந்து வளாகத்தையும், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்களை பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டனர்.

Advertisement

இதனையடுத்து நீதிம்ன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்பது பிரதிவாதிகளுக்கு தலா 65,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்து மடிக்கணினியைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிக்கு 80,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும் வழக்கின் அபராதம் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பதை ஆராய ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version