இலங்கை
டிஜிற்றல் சேவைக்கு ஒக்ரோபர் முதல் வரி!
டிஜிற்றல் சேவைக்கு ஒக்ரோபர் முதல் வரி!
இலங்கையில் வழங்கப்படும் டிஜிற்றல் சேவைகளுக்கு வற்வரி விதிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரிவிதிக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய டிஜிற்றல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த முதலாம் திகதி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அதற்கமைய இலங்கையில் நபர் ஒருவருக்கு மின்னணுத்தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் டிஜிற்றல் சேவைகளுக்கு வரி செலுத்தவேண்டும். கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் வற்வரிக்குப் பதிவுசெய்வது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .