இலங்கை
தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி: கெஹலியவுக்கு அழைப்பாணை
தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி: கெஹலியவுக்கு அழைப்பாணை
தரமற்ற நோய் எதிர்ப்புத் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உட்பட 12 பேரை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்நேற்று முன்தினம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை பரிசீலனை செய்த நீதியரசர்களான மஹேன் வீரமன், பிரதீப் அபேரத்ன மற்றும் அமாலி ரணவீர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அன்றையதினம் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களையும் முறைப்பாட்டுத்தரப்பு சாட்சிகளாகப் பெயரிட சட்டமா அதிபர் நட வடிக்கை எடுத்துள்ளார்.