இலங்கை
துமிந்தவுக்கு மறியல் நீடிப்பு!
துமிந்தவுக்கு மறியல் நீடிப்பு!
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடிக்குடியிருப்பு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட் டது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில். முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது.