இலங்கை

தேனெடுக்கச் சென்றவர் சடலமாக நேற்று மீட்பு!

Published

on

தேனெடுக்கச் சென்றவர் சடலமாக நேற்று மீட்பு!

கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியில், தேன் எடுப்பதற்காகச் சென்ற நபர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நிலையில்  உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெருமாள்துரை துரைராசா (வயது – 51) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரத்தால் வீழ்ந்தவர் உறவினர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version