இலங்கை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்கு தொல்லை ; அவதிக்குள்ளான மக்கள்

Published

on

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்கு தொல்லை ; அவதிக்குள்ளான மக்கள்

திருகோணமலை கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை குரங்குகள் அழித்து விடுவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

கந்தளாய் பேராறு, பேராற்று வெளி, அனைக்கட், மதுரசா நகர், ரஜ எல, வான் எல மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கிறது.

வனத்துறை அதிகாரிகள், குரங்குகளை பிடித்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version