இலங்கை

பகிடிவதை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

பகிடிவதை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

அந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடலுடன் மூளையிலும் காயங்கள் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா , அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார்.

அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுவை பிறப்பித்தது.

மேலும் இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விசாரிக்க ஜனவரி 14 ஆம் திகதி வழக்கை அழைக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version