இலங்கை
பிரபாகரனை கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியைப் பிடிக்க திணறுகின்றது அரசு; சாமர சம்பத் எம்.பி விசனம்!
பிரபாகரனை கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியைப் பிடிக்க திணறுகின்றது அரசு; சாமர சம்பத் எம்.பி விசனம்!
பிரபாகரனையே கண்டுபிடித்த நாட்டில், செவ்வந்தியைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. முடிந்தால் 30 நாள்களுக்குள் அவரை கைது செய்யவும் இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டில் இன்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற யுவதி நாட்டை விட்டுச் செல்லவில்லை. இங்குதான் இருக்கின்றார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார். இலங்கையென்பது சிறிய நாடு. பிரபாகரனையே கண்டுபிடிக்க முடிந்தது எனில், செவ்வந்தியை ஏன் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு மாதகாலம் அவகாசம் வழங்குகின்றோம். செவ்வந்தியைக் கைதுசெய்து காட்டுங்கள். நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியைக் கொண்டு சென்றமை, துப்பாக்கிதாரிக்கு பயிற்சி அளித்தமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட செவ்வந்தியே பிரதான சூத்திரதாரி. அவர் கைது செய்யப்பட வேண்டும். நாட்டில் இன்று நாளாந்தம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்’- என்றார்.