சினிமா
பிரியங்கா மோகனின் பிங் நிற சேலை போட்டோஷூட்..!ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட க்ளிஸ்..!
பிரியங்கா மோகனின் பிங் நிற சேலை போட்டோஷூட்..!ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட க்ளிஸ்..!
தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பாலும் அழகிய தோற்றத்தாலும் ரசிகர்களை ஈர்த்து வரும் பிரபல நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனது புதிய புகைப்படத் தொகுப்பால் சமூக வலைத்தளங்களை கவர்ந்துள்ளார். பிங் நிற சேலையில் போஸ் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகிய பிறகு, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.பிரியங்கா மோகன், 2019-ஆம் ஆண்டு கன்னட மொழி திரைப்படமான “ஒந்து கதே ஹேல்லா” மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். அடுத்த கட்டமாக, தெலுங்கில் நடிகர் நானி உடன் நடித்த “கேங் லீடர்” திரைப்படத்தில் தனது நடிப்புத் திறமையால் திரையரங்குகளை கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து, “ஸ்ரீகரம்”, “சாணு ஸ்டுடென்ட்”, “டாக்டர்” (சிவகார்த்திகேயனுடன்), “எதற்கும் துணிந்தவன்”, “டான்”, மற்றும் சமீபத்திய “கேப்டன் மில்லர்” போன்ற வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது மாறுபட்ட தேர்வுகள், அழகு, அழுத்தமான நடிப்பு மற்றும் இயற்கையான எக்ஸ்பிரஷன்கள் திரையுலகில் அவரை ஒரு விரும்பத்தக்க நடிகையாக மாற்றியிருக்கின்றன.நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்த உறவை வைத்திருப்பவர். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய போட்டோஷூட் வெளியிடும்போது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.சமீபத்தில், பிங் நிறத்தில் கூர்மையான சேலை மற்றும் அணிகலன்களுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டோஷூட்டில், பிரியங்கா தனது அழகு மற்றும் நவீன பாரம்பரிய வடிவமைப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.அந்த புகைப்படங்களில் பளபளப்பான பிங்க் நிற சேலை, அழகான ஜுயலெரி, மெதுவான ஸ்மைல், மற்றும் சிம்பிளான மேக்கப். ரசிகர்கள் இதற்கு “சேலையின் ராணி”, “நிஜமான தமிழ் பெண் அழகு”, “எதார்த்த சினிமா நாயகி” என புகழ்ச்சி மழை பொழிகின்றனர்.மேலும் ரசிகர்கள் தங்கள் கருத்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.