இந்தியா
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் கைது
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் கைது
மத்திய மற்றும் புதுச்சேரி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசை கண்டித்து இன்று புதுச்சேரியில்இந்தியா_கூட்டணி அனைத்து தொழிற்சங்கங்களின் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி இந்திரா காந்தி சுகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர். போலீசார் 200க்கும் மேற்பட்டோர்களை இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்களை கைது செய்தனர்புதுச்சேரியில், கதிர்காமம், உழவர்கரை, தட்டாஞ்சாவடி இந்திராநகர் தொகுதி திமுக சார்பில் தொழிலாளர் நல உரிமை சட்டங்களை பாதுகாத்திட, குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட, கட்டிடக்கலை தொழிலாளர், ஆட்டோ, சுமை தூக்கும் தொழிலாளர், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், கிராமப்புற விவசாய தொழிலாளர்கள், அரசு பொது துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, இன்று இந்திரா காந்தி சதுக்கத்தில் நடைபெற்றது.காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவரேஜ் எம்பி வைத்திலிங்கம் திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவாய எம் எல் ஏ சலீம் நாரா கலைநாதன் ஏராளமானவர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல் அரசு துறைகளில் ஓய்வு பெற்றவர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தி இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிடும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், புதுச்சேரி பாஜக கூட்டணி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவரேஜ் எம்பி வைத்திலிங்கம் திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவாய எம் எல் ஏ சலீம் நாரா கலைநாதன் ஏராளமானவர்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.