இலங்கை
போருக்குப் பின்னர் இடம்பெற்ற 10 காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்; அரசாங்கம் தொடர்ச்சியான விசாரணை
போருக்குப் பின்னர் இடம்பெற்ற 10 காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள்; அரசாங்கம் தொடர்ச்சியான விசாரணை
போருக்கு பின்னர் வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற 10 காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவை இன்னும் நிறைவுபெறவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடக்கு, கிழக்கில் யுத்தத்துக்குப் பிறகு 10 காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், நான்கு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், 6 காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. இதேவேளை, காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளில் தற்போது அரசியற் தலையீடுகள் இல்லை. விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன – என்றார்.