இலங்கை

யாழில் மீன் கொள்வனவு செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

Published

on

யாழில் மீன் கொள்வனவு செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பான அறிவித்தல் ஒன்றை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர்  வெளியிட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதன்படி,

1 கிலோ கிராம் மீன் வெட்டுவதற்கு 50 ரூபாய், 1 கிலோ கிராம் நண்டு வெட்டுவதற்கு 50 ரூபாய்,   

1 கிலோ கணவாய் வெட்டுவதற்கு 100 ரூபாய்

Advertisement

1 கிலோ கிராம் சுறா மீன் வெட்டுவதற்கு 100 ரூபாய்,   

1 கிலோ கிராம் திருக்கை வெட்டுவதற்கு 50 ரூபாய் , 1 கிலோ கிராம் பெரிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 100 ரூபாய்,

1 கிலோ கிராம் சிறிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 120 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணம் எதுவும் அறவிட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அதிகமாகக் கட்டணங்கள் அறவிடப்படுமாயின் 021 2222700 அல்லது 021 2212178 என்ற இலக்கங்களூடாக பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.

விசாரணைகள் மூலம் மேலதிக கட்டணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், உரியவர்களுக்கு எதிராகப் பிரதேச சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version