பொழுதுபோக்கு

ரஜினி படத்தால் இடம்; கமல் படத்தால் கிடைத்த வீடு: பிரபல இயக்குனர் வாழ்க்கை மாற்றம்!

Published

on

ரஜினி படத்தால் இடம்; கமல் படத்தால் கிடைத்த வீடு: பிரபல இயக்குனர் வாழ்க்கை மாற்றம்!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகிய இருவரும் இரு துருவங்களாக இருந்தாலும், இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து படம் இயக்குனம் வல்லமை இருக்கக்கூடிய இயக்குனர் என்று பெயரெடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் தான் வீட்டுக்கு மனை வாங்கியது ரஜினி படம் என்றால் அதில் வீடு கட்ட உதவியது கமல் படம் என்று கூறியள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அந்த படத்தில் சரத்குமார், ரகுமான், ரகுவரன், ஆனந்த்பாபு, ரேகா என அப்போதைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து சிறப்பாக இயக்கி முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருந்தார்அதனைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் சேரன் பாண்டியன் படத்தை இயக்கினார். விஜயகுமார், ஆனந்த் பாபு, நாகேஷ் ஆகியோருடன், முக்கியமான வில்லன் கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமாரே நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன்பிறகு, ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், புருஷ லட்சனம், சக்திவேல், நாட்டாமை, நட்புக்காரக என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்,இவர் இயக்கிய பல படங்களில் நடிகர் சரத்குமார் தான் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது படம் இயக்குவதை நிறுத்திவிட்ட கே.எஸ்.ரவிக்குமார், நடிப்பது படங்கள் தயாரிப்பது என சினிமாவில் இருந்து வருகிறார். குறிப்பாக இவர் நடிக்கும் கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பேட்டி நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வரும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் 3 பி.எச்.கே படக்குழுவை பேட்டி எடுத்தார்.சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில. பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் வைத்து படையப்பா படம் இயக்கும்போது, நான் எனது வீட்டுக்கான நிலத்தை வாங்கிகேன். மொத்தம் அப்போது அந்த இடம் ரூ65 லட்சம். 3 லட்சம் பத்திரபதிவு. படையப்பா படத்தில் எனக்கு 65 லட்சம் சம்பளமாக கிடைத்தது. அதை வைத்து அந்த இடத்தை வாங்கினேன். இந்த இடம் படையப்பா. அதில் வீடு கட்டியது தெனாலி. தெனாலி படத்தை நானே தயாரிக்க வேண்டும் என்று கமல் சார் என்னை தயாரிப்பாளர் ஆக்கினார்.அந்த படத்தை எடுத்தபோது எனக்கு 3 கோடி லாபம் கிடைத்தது. அந்த 3 கோடி ரூபாய் பணத்தில் மேலும் ஒரு 30 லட்சத்தை சேர்த்து, படையப்பா படத்தின்போது வாங்கிய நிலத்தில் வீடு கட்டினேன். இடம் படையப்பா வீடு தெனாலி. அதனால் இந்த பக்கம் ஒரு வேல் வைத்து கே.எஸ்.ரவிக்குமார் அந்த பக்கம் ஒரு வேல் வைத்து கற்பகம் என்று பெயர் எழுதி வைத்திருக்கிறேன். படையப்பா தெனாலி 2 படங்களிலும் வேல் முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version