இலங்கை

வரதட்சனை கொடுமையால் பலியான பெண் ; குற்றவாளிகளுக்கு ஷொக் கொடுத்த நீதிமன்றம்

Published

on

வரதட்சனை கொடுமையால் பலியான பெண் ; குற்றவாளிகளுக்கு ஷொக் கொடுத்த நீதிமன்றம்

இந்தியாவின் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு, வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

Advertisement

ரிதன்யாவின் தற்கொலை, அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வரதட்சணை கோரிக்கைகளால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில், கவின்குமார் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, மூவரும் ஜாமீன் கோரி திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், ரிதன்யாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் இந்த ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கின் தீவிரத்தன்மையையும், குற்றச்சாட்டுகளின் பின்னணியையும் கருத்தில் கொண்டு, நீதிபதி குணசேகரன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement

இந்த தீர்ப்பு, ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்தாலும், சமூக ஊடகங்களில் இது குறித்து பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன.

வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது.

இணையத்தில், பலர் இந்த தீர்ப்பை வரவேற்று, நீதித்துறையின் இந்த முடிவு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த வழக்கு மேலும் என்ன திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version